தருமபுரி ஏழை விவசாயியிக்கு டிராக்டரை கொடுத்த ராகவா லாரன்ஸ்… இறுதியில் கொடுத்த அன்பு அட்வைஸ்..!!

Author: Babu Lakshmanan
11 May 2024, 8:01 pm

தருமபுரியைச் சேர்ந்த ஏழை விவசாயி இளைஞருக்கு டிராக்டரை பரிசாக வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ், அன்பு அட்வைஸ் செய்தார்.

திரைப்பட நடிகர் ராகவா லாரன்ஸ் மாற்றம் பவுண்டேஷன் என்ற பெயரில் தமிழக முழுவதும் உள்ள ஏழை எளிய விவசாயிகளுக்கு தன்னால் இயன்ற இலவச டிராக்டர் வழங்கும் சேவையை செய்து வருகிறார்.

அந்த வகையில், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள மூங்கப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் விவசாயி பிரபாகரன் என்ற இளைஞருக்கு நடிகர் லாரன்ஸ் டிராக்டர் வழங்குவதற்காக வந்திருந்தார். அவருக்கு கிராம மக்கள் மேல தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, கிராம மக்கள் அவரவர் குழந்தைகளை நடிகர் லாரன்ஸ் கையில் கொடுத்து தங்களது செல்போனில் போட்டோ எடுத்துக்கொண்டனர்.

மேலும் படிக்க: சசிகலாவுக்கு அதிமுக அளித்த ஷாக்… கொந்தளிக்கும் டிடிவி, ஓபிஎஸ்..!

இதனைத்தொடர்ந்து, விவசாயி பிரபாகரனிடம் டிராக்டர் சாவியை கொடுத்த நடிகர் லாரன்ஸ் இந்த டிராக்டரை யாரிடமும் காசு வாங்கிக்கொண்டு இதை தரவில்லை. இரவு பகல் பாராமல் உழைத்து அந்த பணத்தில் இதை நான் செய்கிறேன். இந்த டிராக்டரை உங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஊர் மக்கள் யாரெல்லாம் விவசாயம் செய்ய கேட்கிறார்களோ, அவர்களுக்கும் இலவசமாக கொடுங்கள், என விவசாயி பிரபாகரனுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் மாற்றம் மாற்றம் என்று பேசிக்கொண்டே இருந்தால் போதாது, ஒவ்வொரு ஊருக்கும் செல்ல வேண்டும். ஒவ்வொருவரின் கண்ணீரையும் துடைக்க வேண்டும். ஒவ்வொருவரின் பசியை தீர்க்க வேண்டும். அவர்கள் சம்பாதிக்கும் வழியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என பேசினார்.

இதனைத் தொடர்ந்து கிராமத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி அன்னதானம் வழங்கிய நடிகர் ராகவா லாரன்சுக்கு பாசமாக சோறு ஊட்டிவிட்டு மகிழ்ந்தனர். பின்பு அவர்களுடன் அமர்ந்து உணவருந்தி மகிழ்ச்சியை தெரிவித்தார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!