சிம்பு, விக்ரம் படங்களை வெளியிடக் கூடாது : பிரபல தயாரிப்பாளர் மீது வழக்கு தொடர்ந்த சிவகார்த்திகேயன்..!

Author: Rajesh
29 March 2022, 11:06 am
Quick Share

சின்னத்திரையில் திரையுலக பயணத்தை தொடங்கி, தற்போது வெள்ளித்திரையில் முன்னணி ஹீரோவாக உயர்ந்தவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் தான் டாக்டர். இந்த பட வெற்றியைத் தொடர்ந்து, டான், அயலான், சிங்கப்பாதை போன்ற படங்கள் உள்ளன. இது தவிர, கமலின் ராஜ்கமல் ப்ரொடக்ஷனில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இதனிடையே நடிப்பதை தாண்டி பாடல்கள் எழுதுவது, படங்கள் தயாரிப்பது, பாடுவது என பல திறமைகள் கொண்டவராகவும் திகழ்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கனா படத்தினை தயாரித்தார். நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தில் ‘எனக்கு கல்யாண வயசுதான் வந்துடுச்சி’ என்ற பாடலை பலரது கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து, டாக்டர் படத்தில் செல்லமா பாடலையும் தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படத்திலும், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்திலும் சிவகார்த்திகேயன் பாடல்கள் எழுதியுள்ளார்.

இவ்வாறு தனது திறமைகள் மூலம் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ளார். இந்த நிலையில் தான் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது வழக்கு தொடர்ந்துள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் 2019ம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் மிஸ்டர் லோக்கல். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். ஆனால் இப்படத்திற்கான சம்பள பாக்கி ரூ. 4 கோடியை அவர்கள் இன்னும் கொடுக்கவில்லை, வாங்கி தர வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

மேலும், Mr Local படத்திற்கான ரூ. 15 கோடி சம்பளத்தில் ரூ. 11 கோடி மட்டுமே கொடுத்துள்ளதாகவும் பாக்கியை தர கோரியுள்ளார். அதுவரை சிம்பு மற்றும் விக்ரம் படங்களை ரிலீஸ் செய்ய உத்தரவிடக் கூடாது என்றும் அந்த வழக்கில் குறிப்பிட்டுள்ளார் . மார்ச் 31ல் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Views: - 807

0

0