குடும்பத்தோடு உடல் உறுப்பு தானம்…இதுவரை 23 முறை ரத்த தானம்: விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசு ஊழியருக்கு குவியும் பாராட்டு..!!

Author: Rajesh
29 March 2022, 11:06 am

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தங்களுடைய உடல் உறுப்புகளை தானம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

விருதுநகர் பகுதியில் ஆர்டிஓ ஆக பணிபுரிந்து வருபவர் பாஸ்கரன். இவரது வீடு கோவையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குடும்பத்தில் இவருடைய மகன் மகள் மற்றும் யாராவது பிறந்தநாள் என்றால் அப்போது இரத்த தானம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

குடும்ப உறுப்பினர்களும் மகிழ்ச்சியோடு ரத்ததானம் செய்து வந்துள்ள நிலையில் தன்னுடைய மகனின் 22வது பிறந்த நாளை முன்னிட்டு அவரும் அவருடைய மகன் மகள் மனைவி மற்றும் மருமகன் ஆகியோர் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர்.

இதுவரை மொத்தம் 23 முறை இரத்த தானம் செய்துள்ள பாஸ்கரன் மதுரையில் இருந்த பொழுது குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேரும் கண் தானம் செய்துள்ளனர்.

மேலும் அத்தனை முக்கிய உறுப்புகளையும் தானம் செய்துள்ளனர். உடல் உறுப்பு சார்ந்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்ம் என்ற நோக்கில் மட்டுமே இத்தனை நாட்களாக இவர் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!