ரசிகரின் இல்லத்திற்கு ஆட்டோவில் சென்ற நடிகர் சூரி : உடல்நலம் குன்றிய தாயாரை சந்தித்து நலம் விசாரிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
31 May 2023, 4:25 pm

ரசிகரின் தாயாரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த நடிகர் சூரி : ஆட்டோவில் விசிட் அடித்த வீடியோ வைரல்!!

தமிழ் திரையுலகின் நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது விடுதலை திரைப்படத்தின் மூலமாக நாயகனாக உருவெடுத்துள்ள நடிகர் சூரி,
மதுரை தத்தனேரி அருகே உள்ள பாக்கியநாதபுரம் பகுதியில் உள்ள தனது ரசிகரான மஹதீரன் என்பவரது தாயார் உடல் நலம் குன்றியிருந்த நிலையில் அவரை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரிப்பதற்காக ஆட்டோ மூலமாக ரசிகரின் வீட்டிற்கு சென்றார்.

அங்கு சென்று தனது ரசிகரின் தாயாரின் உடல்நலம் குறித்து விசாரித்த சூரி உடல்நலனை பார்த்துகொள்ளுமாறு நலம் விசாரித்துசென்றார். நடிகர் சூரி தனது வீட்டிற்கு வருகை தந்த நிலையில் சூரி ரசிகரின குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

மேலும் வீட்டின் அருகே இருந்த நபர்களும் நடிகர் சூரி எளிமையாக ஆட்டோவில் சென்று வீடுதேடி உடல்நலம் குறித்து விசாரித்துசென்ற வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டாகிவருகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!