வேகமாக வீசிய காற்றுக்கு மேற்கூரை பெயர்ந்து போன சம்பவம்… அரசுப் பேருந்தின் அவலத்தால் பயணிகள் அப்செட்… வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
31 May 2023, 2:45 pm
Quick Share

சென்னை ; பழவேற்காடு அருகே பலத்த காற்றுடன் திடீரென பெய்த மழையில் சென்னை மாநகர அரசு பேருந்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டார பகுதியில் திடீரென பலத்த புழுதி காற்றுடன் நேற்று மழை பெய்தது. அப்போது, பழவேற்காட்டில் இருந்து செங்குன்றம் நோக்கி சென்ற 558 B என்ற சென்னை மாநகர அரசு பேருந்து மேற்கூரை காற்றின் வேகத்தில் பெயர்ந்து விழுந்தது. இதில், பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர் தப்பினர்.

பின்னர், ஓட்டுநர் கந்தன் மற்றும் நடத்துனர் பன்னீர் ஆகிய இருவரும் பயணிகளை வேறு பேருந்தில் அனுப்பி வைத்தனர். பாடியநல்லூர் பணிமனையில் இருந்து இயக்கப்பட்ட பேருந்தின் மேற்கூரை பழவேற்காடு அருகே காற்றின் வேகத்தில் தனியாக பெயர்ந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவ்வழியாக வேறு வாகனங்கள் ஏதும் வராததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

Views: - 94

0

0