நிலமோசடி புகார் அளித்த நடிகர் சூரி: மத்திய குற்றப்பிரிவு போலீசார் சூரிக்கு சம்மன்…!!!

By: S
9 October 2020, 4:49 pm
soori-2-updatenews360
Quick Share

நிலம் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக புகார் அளித்த நடிகர் சூரிக்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

நடிகர் சூரியிடம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையுமான ரமேஷ் குட்வாலா ஆகியோர் மீது சூரி புகார் அளித்திருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த நடிகர் விஷ்ணு விஷால், தன் மீதும், தன் தந்தை மீதும் கூறப்பட்டுள்ள மோசடி புகார் பொய்யானது என்று தெரிவித்துள்ளார். மேலும், இத்தகைய பொய்யான குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியும், வருத்தமும் அளிப்பதாகவும், இதனை சட்டப்படி எதிர்கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் சூரி அக்டோபர் 29ம் தேதிக்குள் ஆஜராகி புகார் தொடர்பாக விளக்கம் அளிக்க வருமாறு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

Views: - 82

0

0