ரசிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவாரா நடிகர் சூர்யா! மதுரையில் பரபரப்பு!!
26 August 2020, 10:17 amமதுரை : சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் ஓடிடியில் வெளியாவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாத இறுதியில் மூடப்பட்ட தியேட்டர்கள் இதுவரை திறக்கப்படவில்லை. மேலும் படப்பிடிப்பும் நடக்காததால் திரைதுறை முடங்கியது.
எனினும் அனைத்து பணிகளும் முடிந்த சில படங்கள் ஓடிடியில் வெளியாகின.
இந்நிலையில் நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியிடப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. அனைத்து பணிகளும் திரைப்படம் தயாராகி 4 மாதங்களாக திரையிடப்பட முடியாததால், வரும் அக்டோபர் 30ஆம் தேதி வெளியாகும் என சூர்யா அறிக்கை மூலமாக தெரிவித்தார்.
இதற்கு ஒரு சிலர் ஆதரவு தெரிவித்தாலும், திரைப்படத்துறையை சேர்ந்த சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் மதுரையில் அவரது ரசிகர்களின் நெஞ்சம் பொறுக்கவில்லை- சூரரைப்போற்று படத்தை திரையரங்கில் தான் வெளியிட வேண்டும் என போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
அதில், ஓடிடியில் வெளியிடக் கூடாது என்றும் இந்தப்படத்திற்காக நீண்ட காலம் காத்திருந்தோம். ஓடிடியில் வெளியாவது ஏமாற்றத்தை தருகிறது எனவும், சூர்யாவின் வார்த்தைக்காக பணிவோடு கேட்கிறோம் என ரசிகர்கள் அடங்கிய போஸ்டர்களை மதுரை மாநகர் முழுவதும் ஒட்டியுள்ளனர்