நடிகையின் சம்மதத்துடன் தான் உடலுறவு கொண்டேன்.. பிரபல நடிகரின் பதிலால் ஷாக்கான திரையுலகம்.!

Author: Rajesh
26 May 2022, 1:37 pm

அண்மையில் மலையாள திரைப்பட நடிகை ஒருவர், நடிகரும், தாயாரிப்பாளருமான விஜய் பாபு மீது கொச்சி காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், விஜய் பாபு தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியிருந்தார். இதனையடுத்து, போலீசார் நடிகர் விஜய்பாபு மீது வழக்கு பதிவு செய்தனர். இதுபற்றி போலீசார் விசாரிக்கத் தொடங்கியதும் விஜய் பாபு துபாய்க்குத் தப்பி சென்றார்.

எனவே அவரை பிடிக்க கேரள போலீசார் இன்டர்போல் போலீசாரின் உதவியை நாடினர். போலீசாரின் தேடுதல் வேட்டை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து நடிகர் விஜய்பாபு ஜார்ஜியா நாட்டுக்கு தப்பி சென்றதாக கூறப்பட்டது. எனவே அங்கிருந்து அவரை இந்தியா அழைத்து வர போலீசார் முயற்சி மேற்கொண்டனர்.

இதற்கிடையே இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க கேட்டு நடிகர் விஜய்பாபு கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணைக்கு வந்த போது குற்றம் சாட்டப்பட்டவர் இந்தியாவில் இருக்கிறாரா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். விசாரணை தொடங்கும் போது விஜய் பாபு துபாய் சென்றுவிட்டதாகவும், பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டு விட்டதால் இந்தியா திரும்ப முடிய வில்லை என்றும், வாய்ப்பு கிடைத்தால் விசாரணை அதிகாரி முன்னிலையிலோ அல்லது நீதிமன்றத்திலோ ஆஜராக தயார் என்றும் விஜய் பாபுவின் வழக்கறிஞர் கூறினார்.

இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவர் இந்தியாவுக்கு வரட்டும். பிறகு முன்ஜாமீன் மனு மீது விசாரணை நடத்தலாம் என்று நீதிபதி கூறினார். இந்த நிலையில், புகார் அளித்த நடிகையுடன் தனக்கு நட்பு இருப்பதாகவும், அவரின் சம்மதத்துடன் உடலுறவு கொண்டதாகவும், வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்றும் விஜய்பாபு புதிய மனுவில் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வு கேரள திரையுலகில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!