விலை உயர்ந்த காரில் நடிகர் விஜய்… இதுவரை யாரும் பார்த்திடாத வீடியோ வைரல்…!

Author: Rajesh
21 July 2022, 6:21 pm

தமிழ் சினிமாவில் தற்போது உச்சநட்சத்திரமாக இருக்கும் நடிகர்களின் ஒருவர் தான் விஜய். இவர் படம் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் படி இருக்கும். அதனால், இவர் நடிப்பில் சுமாராக இருந்த திரைப்படங்கள் கூட நல்ல வசூலை பெற்றுள்ளன.

‘பீஸ்ட்’ படத்தை முடித்த கையோடு வம்சி பைடிபல்லி இயக்கும் வாரிசு படத்தில் பிஸியாக இருக்கிறார் விஜய். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷாம், ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது. தமன் இப்படத்திற்கு இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

வம்சி இயக்கும் இப்படம் வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தனர். இப்படத்திற்கு பிறகு மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

தற்போது கிடைத்துள்ள ஒரு புதிய வீடியோவையும் வைரலாக்கி வருகின்றனர். அதில் கப்பல் போன்ற மிகப்பெரிய காரில் இருந்து தளபதி விஜய் இறங்கி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டில் விலைஉயர்ந்த காரின் இருந்து நடிகர் விஜய் இறங்கி தனது ரசிகர்களை சந்திக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.தற்போதைய வீடியோ இது இல்லை என்றாலும் இந்த வீடியோவை ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருகின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!