நடிகர் விஜய் சேதுபதியின் பட தயாரிப்பாளர் பாஜகவில் இணைந்தார்!!

4 November 2020, 12:05 pm
Porducer Joins Bjp - Updatenews360
Quick Share

நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த க/ பெ ரணசிங்கம் படத்தின் தயாரிப்பாளர் பாஜகவில் இணைந்துள்ளார்.

தமிழ் சினிமா தயாரிப்பாளரான கே.ஜே ராஜேஷ், தமிழில் வெளியான அறம், ஐரா, சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ போன்ற படங்களை தயாரித்தவர். கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனத்தின் மூலம் படம் தயாரித்த ராஜேஷ், சமீபத்தில் க/ பெ ரணசிங்கம் என்ற படத்தை தயாரித்தார்.

இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், முனிஷ்காந்த் உட்பட பலர் நடித்த இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார். இந்த படம் கடந்த மாதம் ஒடிடியில் வெளியானது. ஜீ பிளக்சில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த நிலையில் ஜே.கே ராஜேஷ், தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், பாஜகவில் சேர்ந்ததில் மகிழ்ச்சியாக உள்ளத என்று பதிவிட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் கட்சி மற்றும் மாநில, நாட்டு மக்களுக்காக கடுமையான உழைப்பேன் என்று பதிவிட்டுள்ளார்.

Views: - 63

0

0