நடிகர் விவேக் தலைமுறைகளை கடந்து மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பார் : தபெதிக தலைவர் புகழாரம்!!

17 April 2021, 2:11 pm
Cbe TPTK Vivek -Updatenews360
Quick Share

கோவை : திரைப்படங்களில் கூறிய பெரியாரிய கருத்துக்கள் மூலம் தலைமுறைகளைக் கடந்தும் மக்கள் மனதில் நடிகர் விவேக் வாழ்ந்து கொண்டிருப்பார் என தந்தை பெரியார் திராவிட கழக தலைவர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில், பெரியார் சிலை முன்பு மாரடைப்பால் உயிரிழந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் உருவப்படத்துக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் வீரவணக்கம் செலுத்தினர்.

பின்னர் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நடிகர் விவேக் திரைப்படங்களில் பெரியாரின் மூடநம்பிக்கை ஒழிப்பு குறித்த கருத்துக்களை மக்கள் மனதில் பதியும் வகையில் சிரிக்க வைத்து சிந்திக்க வைத்தார் என புகழாரம் சூட்டினார்.

தனது வாழ்வில் மக்களையும், மண்ணையும், இயற்கையையும் நேசிக்கும் பசுமை ஆர்வலராக விவேக் திகழ்ந்தார் எனவும் தமிழக மக்கள் ஒரு சிறந்த நடிகரின் மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்தவாதியும் சேர்த்தே இழந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

நடிகர் விவேக் திரைப்படங்களில் கூறிய கருத்துக்கள் காலத்தைக் கடந்தும் மக்களிடம் பேசப்படும் எனவும், திரைப்படங்கள் மூலம் பெரியாரின் கருத்துக்களை எடுத்துச் சென்று மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் கலைவாணர் மற்றும் எம்.ஆர் ராதா போல நடிகர் விவேக்கும் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருப்பார் எனவும் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

Views: - 10

0

0