ஜெயித்ததும் தன்சுயருபத்தைக் காட்டிய கே.ஜி.எப். நடிகர்.. என்ன செய்தார் தெரியுமா..?

Author: Rajesh
19 April 2022, 4:52 pm

கன்னட நடிகர் யஷ் நடித்த கேஜிஎஃப் 2 வெளியாகி மிகப் பெரிய வசூலை குவித்து வருகிறது. இந்த படத்தில் ஹீரோவின் நடிப்பு பலரது நடிப்பை பெற்று இந்திய அளவில் பிரபலமாகியுள்ளார். இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியின் போது ரசிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும் வகையில் ரொம்பவும் எதார்த்தமாக பேசினார். ரசிகர்களுக்கும் இவரை மிகவும் பிடித்து போக தமிழ் ரசிகர்களின் மனங்களிலும் இடம் பிடித்தார்.

ஆனால் கே ஜி எஃப் படம் வெளியான போது பல இடங்களிலும் கன்னட சினிமா தற்போது முன்னேறி வருவதாக அவர் ஒரு மனதுடன் பேசி வந்தார். அதுமட்டுமல்லாமல் அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு கன்னடனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன் என்ற வாசகத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு தேவை என்றால் இந்தியன் என்கிறீர்கள் இல்லை என்றால் கன்னடன் என்று சொல்கிறீர்கள் எதற்காக இந்த முகமூடி என்று அவருக்கு எதிராக விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். மேலும், எதார்த்தமாக பேசுவதாக நினைத்துக்கொண்டு ரசிகர்களை ஏமாற்றாதீர்கள் என்று யஷின் முகத்திரையை ரசிகர்கள் கிழித்தெறிந்து வருகின்றனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?