ஹாய் மச்சான்ஸ்.. எனக்கு Twins.. தனது இரட்டை குழந்தைகளை முதன்முறையாக வீடியோவில் காட்டிய நடிகை நமீதா..!

Author: Vignesh
30 September 2022, 7:20 pm

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த ஒரு நடிகை. மச்சான்ஸ் என செல்லமாக ரசிகர்களை அழைப்பார், எப்போதும் எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும் ஹாய் மச்சான்ஸ் என்று அவர் கூறும் அந்த வார்த்தை ரசிகர்களால் ரசிக்கப்படும்.

சினிமாவில் நுழைந்ததும் கொஞ்சம் ஹிட் படங்களில் நடித்த நமீதாவிற்கு அடுத்தடுத்து எந்த நல்ல படங்களும் அமையவில்லை. பின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்துகொண்டு வந்தார்.
பிக்பாஸ் முதல் சீசனிலும் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் கலந்துகொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை முடித்த கையோடு நடிகை நமீதா வீரேந்திர சௌத்ரி என்பவரை 2017ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இந்த வருடம் தான் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தார்கள். தற்போது தனது குழந்தைகளை வைத்து நடிகை நமீதா அழகிய போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

அந்த வீடியோவை அவரே வெளியிட்டுள்ளார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?