மருத்துவமனையில் நடிகை நயன்தாரா அனுமதி? வெளியான அதிர்ச்சி தகவல்.. ஷாக்கில் ரசிகர்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
10 August 2022, 10:27 pm
Nayanthara - Updatenews360
Quick Share

நடிகை நயன்தாரா திடீர் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோலிவுட் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, கடந்த ஜூன் மாதம் தான் தன்னுடை காதலர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இவர், உணவு ஒவ்வாமை காரணமாக வாந்தி எடுத்ததாகவும், இதனால் அவரது காதல் கணவர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தகாக கூறப்படுகிறது.

மருத்துவர்கள் சிகிச்சை அளித்த சில மணி நேரங்களில், நயன்தாரா நலமாகிவிட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஆனால் இந்த செய்தி குறித்து, நயன்தாரா – விக்னேஷ் சிவன் தரப்பில் இருந்து எவ்வித அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

Views: - 175

1

1