இவரை போல விக்னேஷ் சிவன் இருந்தால் தான் நயன்தாரா நயன்தாரா.. உண்மையை சொன்ன பிரபல தாத்தா…!

Author: Rajesh
2 August 2022, 10:32 am

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் என பல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா. இவரது கைவசம் தற்போது Connecting, AK 62, JAVAAN இன்னும் சில படங்கள் உள்ளன.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் மகாபலிபுரத்தில் கடந்த ஜூன் 9ம் தேதி திருமணம் மிக விமரிசையாக நடந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் தாலியை எடுத்துக் கொடுத்திருக்கிறார்.திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். திருமணம் முடிந்த மறுநாளே நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

விக்கி நயன் இருவரும் நானும் ரௌடி தான் படத்தில் ஒன்றாக பணியாற்றும் போது தான் காதலில் விழுந்தனர்.அந்த படத்தில் நடித்து இருந்த நடிகர் ராகுல் தாத்தா தற்போது அளித்திருக்கும் பேட்டியில் அவர்கள் காதல் பற்றி பேசி இருக்கிறார்.விக்னேஷ் சிவன் பார்ப்பதற்கு பிரபுதேவா போலவே இருக்கிறார், அதனால் தான் நயன்தாரா அவரை காதலிக்கிறார் என அவர் கூறி இருக்கிறார். அந்த விஷயத்தை அவரே நயனிடம் கூறி இருக்கிறாராம்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?