விமான விபத்தில் இருந்து நூலிழையில் உயிர்தப்பிய நடிகை ராஷ்மிகா : விமானத்தில் கோளாறால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
18 February 2024, 2:45 pm

விமான விபத்தில் இருந்து நூலிழையில் உயிர்தப்பிய நடிகை ராஷ்மிகா : விமானத்தில் கோளாறால் பரபரப்பு!!

ராஷ்மிகா மந்தனா பயணித்த விமானம் திடீரென்று நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதும், ஆபத்தான நிலையில் அவர் விமானத்தில் இருந்து பத்திரமாக தப்பியது பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. மும்பையில் இருந்து ஹைதராபாத்துக்கு விஸ்தாரா நிறுவனத்தில் விமானத்தில் ராஷ்மிகா மந்தனா புறப்பட்டார்.

இந்த வேளையில் அவருடன் நடிகை ஷ்ரத்தா தாசும் பயணித்தார்.
இந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு வானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது தான் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடந்தது.

மும்பையில் இருந்து புறப்பட்ட 30 நிமிடத்தில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதை கவனித்த பைலட் உடனடியாக அலர்ட் ஆனார்.
மேலும் அவர் சாமர்த்தியமாக செயல்பட்டு உடனடியாக விமானத்தை மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கி உள்ளார்.

இதனால் விமானத்தில் பயணித்த நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, ஷ்ரத்தா தாஸ் உள்பட அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இத்தகைய சூழலில் தான் ராஷ்மிகா மந்தனா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டபோது உயிர் தப்பித்தது எப்படி? என்பது பற்றி போட்டோவுடன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது ராஷ்மிகா மந்தனா, நடிகை ஷ்ரத்தா தாசுடன் இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோ என்பது 2 போட்டோக்களை இணைத்தபடி உள்ளது.

முதல் பாதியில் ராஷ்மிகா மந்தனா, ஷ்ரத்தா தாஸ் ஆகியோர் சிரித்தபடி உள்ள நிலையில் 2வது பாதியில் அவர்களின் கால்கள் இடம்பெற்றுள்ளது. அதாவது இருவரும் தாங்கள் அமர்ந்திருந்த இருக்கையின் முன்புள்ள சீட்டின் மீது அழுத்தமாக மிதித்து இருக்கும் வகையில் அந்த போட்டோ உள்ளது. மேலும், ‛‛உங்களின் தகவலுக்காக.. இப்படித்தான் நாங்கள் விமான விபத்தில் இருந்து உயிர் தப்பினோம்” என தெரிவித்துள்ளார்.

  • the reason behind lal salaam movie flop was rajinikanth sir extended cameo said by vishnu vishal ரஜினிகாந்த் ரசிகர்களை சீண்டிப்பார்த்த விஷ்ணு விஷால்! களேபரமான சமூக வலைத்தளம்?