சூரியனை ஆய்வு செய்ய நாளை விண்ணில் பாயும் ஆதித்யா விண்கலம்… பழவேற்காடு மீனவர்களுக்கு வந்த திடீர் உத்தரவு..!!

Author: Babu Lakshmanan
1 September 2023, 11:20 am

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா விண்கலம் நாளை ஏவப்படவுள்ளவதால், பழவேற்காடு பகுதி மீனவர்கள் புது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 செயற்கைகோளுக்கான கவுண்ட் டவுன் இன்று தொடங்கவுள்ளது.

செப்டம்பர் 2 ஆம் தேதி (நாளை) ஆதித்யா வின்களம் ஏவப்பட உள்ளதை அடுத்து, பழவேற்காடு மீனவர்கள் இன்று மாலை முதல் நாளை வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கம்போல் ஸ்ரீஹரிகோட்டா ஏவு தளத்தில் ராக்கெட் ஏவப்படும் நாட்களின் போது முன் எச்சரிக்கையாக மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு யாரும் செல்ல வேண்டாம் என வருவாய்த்துறையினர் மற்றும் மீன்வளத்துறையினர்மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி மீனவர்களின் பாதுகாப்பை கருதி இன்று மற்றும் நாளை இந்த நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது.

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!