தமிழகத்தில் அ.தி.மு.க. – பா.ஜ.க., கூட்டணி தொடரும் : எல். முருகன் அறிவிப்பு!!

12 August 2020, 6:19 pm
L Murugan - Updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி தொடரும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார்.

சென்னையில் பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் மற்றும் துணை தலைவர் வி.பி. துரைசாமி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தமிழகத்தில் பா.ஜ.க. அதீத வளர்ச்சி பெற்று வருவதாக துணை தலைவர் வி.பி. துரைசாமி தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் கூறியதாவது :-தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக பா.ஜ.க. உருமாறி வருகிறது. அதே சமயம், தமிழகத்தில் அடுத்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி தொடரும். தமிழகத்தில் இ-பாஸ் முறையை அரசு ரத்து செய்ய வேண்டும், எனக் கூறியிருந்தார்.

Views: - 10

0

0