அதிமுக பிரமுகரை ஓட ஓட விரட்டி அரிவாள் வெட்டு : திமுக கவுன்சிலர் கணவர் உட்பட 3 பேர் கைது!

Author: Udayachandran RadhaKrishnan
4 November 2024, 4:39 pm

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஏழாவது வார்டு அதிமுக வார்டு செயலாளர் ரமேஷுக்கும் திமுக நகர மன்ற உறுப்பினரின் கணவர் சக்தி இருவருக்கும் கட்சியின் வளர்ச்சியில் மோதல் ஏற்பட்டு வந்துள்ளது .

இந்த நிலையில் நேற்று இரவு தனியாக மோட்டார் சைக்கிளில் வந்த ரமேஷை திமுக நகர மன்ற உறுப்பினர் சித்ராவின் கணவர் கோவி.சக்தி , சேனா ரவி , துரை , மூவரும் மன்னார்குடி கீழப்பாலம் மாரியம்மன் கோவில் தெரு அருகே அரிவாளால் தாக்குதல் நடத்தி உள்ளனர் .

தலையில் பலத்த வெட்டு காயங்களுடன் தப்பிய ரமேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . பின்னர் மன்னார்குடி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து டி.எஸ்பி அஸ்வத் ஆண்டோ ஆரோக்கிராஜ் தலைமையில் தனிபடை அமைத்து குற்றவாளிகளை தேடி சென்றபோது முதலில் கோவி. சக்தி மதுபோதையில் டி.எஸ்பியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தள்ளிவிட்டு தப்பி ஓடியுள்ளார் .

இதையும் படியுங்க: என்ன செஞ்சீங்கனு விழுப்புரத்துக்கு ஆய்வு செய்ய வரீங்க? உதயநிதிக்கு சி.வி சண்முகம் கேள்வி!

பின்னர் இன்று காலை கோவி.சக்தி , சேனா ரவி , துரை மூவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் . நேற்று இரவு சக்தி டிஎஸ்பியை தள்ளிய வீடியோ சமூகவலைத்தலைங்களில் வேகமாக பரவிவருகிறது .

  • Bigg Boss Tamil Season 8 updates பிக் பாஸ் வீட்டுக்கு படையெடுத்த பிரபல நடிகர்…உற்சாக வரவேற்பு கொடுத்து அசத்தல்..!
  • Views: - 359

    0

    0