“திமுகவில் இருந்து யார் வந்தாலும் வரவேற்போம்” – அமைச்சர் செல்லூர் ராஜூ…!

10 August 2020, 12:59 pm
Quick Share

தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது எனவும், அதிமுகவின் நல்லாட்சியை மக்கள் என்றும் ஆதரிப்பார்கள் எனவும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் போட்டி என்றால், இரு பெரும் கட்சிகளான அதிமுக மற்றும் திமுகவுக்கு இடையேதான். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிக் கொண்டு இருக்கும் சூழலில் அரசியல் கட்சி தலைவர்கள் அதற்கான முன்னோட்ட கருத்துக்களை வெளிக்கொணர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் , மதுரை மாவட்டம் பரவை பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, பிற கட்சியினரை அதிமுக அன்போடு வரவேற்கும் என குறிப்பிட்டார்.

மேலும், அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது எனவும், அதிமுகவின் நல்லாட்சியை மக்கள் என்றும் ஆதரிப்பார்கள் எனவும் கூறியுள்ளார்.

மேலும், அதிமுகவில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆகிய இருவரின் இரட்டைத் தலைமை முறை தொடரும். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுப்பர் ” என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Views: - 12

0

0