எதிரிகள், துரோகிகள் புறமுதுகு காட்டி ஓடப்போகிறார்கள் : அமைச்சர் ஜெயக்குமார் விளாசல்!!

Author: Udayachandran
7 October 2020, 12:11 pm
Jayakumar - updatenews360
Quick Share

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வருகின்றன.

இந்த நிலையில் அதிமுகவில் ஜெயலலிதா மரணத்திற்கு பின் சந்திக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் அறிவித்தார். இதையடுத்து அதிமுகவில் புதியதாக வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் 11 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் நினைவிடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், 2021ல் அம்மாவின் ஆட்சி அமையும் என்றும் வரும் சட்டமன்ற தேர்தலில் எதிரிகள், துரோகிகள் புறமுதுகு காட்டி ஓடப்போகிறார்கள் என்று தெரிவித்தார்.

மேலும் வழிகாட்டு குழுவில் இ.பி.எஸ் ஆதரவாளர்கள் அதிக அளவில் உள்ளனரா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், அப்படி எதுவும் இல்லை எனவும், ஒருமித்த கருத்தோடு தான் குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது இன்றைய நல்ல நாளில் அனைத்து நன்றாக நடந்துள்ளது என கூறினார். மேலும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நாளை செய்தியாளர்களை சந்திக்கிறேன் என கூறி புறப்பட்டார்.

Views: - 57

0

0