நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக இரட்டை வேடம் போடுவதற்கு அவசியமில்லை : திருமாவளவனுக்கு எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பதிலடி..!!!

By: Babu
15 September 2021, 4:18 pm
admk rajan sellappa - updatenews360
Quick Share

நீட் தேர்வு விவகாரத்தில் இரட்டை வேடம் போட அதிமுகவிற்கு அவசியமில்லை என்று திருப்பரங்குன்றம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வரான பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு., மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா தலைமையில் அதிமுகவினர் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அப்போது, செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது :- நீட் விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் அதிமுகவிற்கு பேச அனுமதிக்காததனாலே வெளிநடப்பு செய்தோம். தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவிற்கு ஆதரவும் தெரிவித்தோம். நீட் விவகாரத்தில் அதிமுக இரட்டை வேடம் போடுகிறது என திருமாவளவன் கூறியிருக்கும் கருத்து ஏற்புடையதல்ல.

திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது எதனையுமே செய்யவில்லை. எனவே உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டார்கள். மதுரை விமான நிலைய விரிவாகத்திக்காக திமுக தற்போது கொண்டு வந்த திட்டத்திற்கு முன்னோடியாகவே அதிமுக அரசு செயல்படுத்தியுள்ளது.விமான நிலையத்தின் சுரங்கபாதைக்காகவும் விமான நிலைய விரிவாகத்திற்காகவும் 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், என கூறினார்.

Views: - 162

0

0

Leave a Reply