சொன்னதை செய்துவிட்டார் முதலமைச்சர்… நாளை கூட்டணி குறித்து அறிவிப்போம் : பாமக தலைவர் பேட்டி..!!

26 February 2021, 9:16 pm
Quick Share

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கூட்டணி கட்சியான பாமக, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து முறையிட்டனர். மேலும், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர். அப்போது, வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்திருந்தார்.

இந்த நிலையில், தமிழக அரசின் கடைசி சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று நடைபெற்றது. இதில், வன்னியர்களுக்கு 10.5 உள்ஒதுக்கீடு செய்யும் சட்ட மசோதாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். பின்னர், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, சட்டமாக்கப்பட்டது. இதன்மூலம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வன்னியர்களுக்கு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, சீர் மரபினருக்கு 7 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் மற்ற சாதியினருக்கு 2.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

GK Mani - updatenews360

இந்நிலையில், வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு அறிவித்த முதலமைச்சர் பழனிசாமிக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதாக பாமக தலைவர் ஜிகே மணி கூறியுள்ளார். மேலும், கூட்டணி பற்றி அறிவிப்பை நாளை ராமதாஸ் முறைப்படி அறிவிப்பார் என்றும், இடைக்கால வெற்றிக்கு தனது நன்றியை ராமதாஸ் தெரிவித்தார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்மூலம், அதிமுக – பாமக கூட்டணி நாளை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படும் எனத் தெரிகிறது.

Views: - 1

0

0