பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு.. நாங்க ஆரம்பித்தால் வேட்டியை கழட்டிட்டு ஓட வேண்டி இருக்கும்… அண்ணாமலைக்கு அதிமுக எச்சரிக்கை

Author: Babu Lakshmanan
8 February 2024, 1:04 pm

அண்ணாமலை மட்டுமல்ல ஆண்டனவால் கூட அதிமுகவை தொட்டு பார்க்க முடியாது என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார்  தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற  கேலோ இந்தியா, இந்தியா பாரா கேம்ஸ் மற்றும் கோவாவில் நடைபெற்ற 22 ஆவது தேசிய பாரா தடகள சேம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் பெற்று தமிழ்நாட்டுக்கும் மதுரைக்கும் பெருமை சேர்த்த வீரர்கள் மனோஜ்  F41 பிரிவில் குண்டு எறிதலில் தங்கப்பதக்கம் மற்றும் வெண்கல பதக்கம் பெற்றார். பிரசாந்த்  F35 பிரிவில் குண்டு எறிதலில் தங்கப்பதக்கம் மற்றும் வெண்கலம் பதக்கம் பெற்றார்.

சந்தோஷ் குமார் F44 பிரிவில் ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் பெற்றார். கணேசன்  f41 பிரிவில் குண்டு எரிதலில் வெண்கல பதக்கமும் ,முனிசாமி F53 பிரிவில் குண்டு எரிதழில் வெண்கல பதக்கமும் மற்றும் இவர்களுக்கு பயிற்சி கொடுத்த மாற்றுத்திறனாளிக்கான தடகளப் பயிற்சியாளர் ரஞ்சித் குமார் பாராட்டு விழா காந்தி மியூசியத்தில் நடைபெற்றது. இவர்களுக்கு சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கௌரவித்தார் 

இதற்கான ஏற்பாட்டினை நெல்லை பாலு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், மாநில எம் ஜி ஆர் இளைஞர் அணி துணை செயலாளர் சிவசுப்பிரமணியன், போக்குவரத்து பிரிவு மண்டல செயலாளர் ராஜாங்கம் உட்பட பலர் இருந்தனர்.

பின்னர், முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறியதாவது ;- அதிமுக தேர்தல் தயாரிப்பு குழு நாளை மக்களிடம் கருத்துக்களை கேட்க உள்ளது. 6 மண்டலங்களில் அதிமுக தேர்தல் தயாரிப்பு குழுவிற்கு மக்கள் அதிக அளவில் ஆதரவு அளித்தனர். திமுக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 100 வாக்குறுதிகளை அளித்தது. திமுகவின் வாக்குறுதிகளை நம்பி மக்கள் திமுகவுக்கு வாக்கு அளித்தனர்.

நம்பிக்கையை சிதறடிக்கும் வகையில் திமுக நாடாளுமன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதிமுக தேர்தல் தயாரிப்பு குழுவிடம் கோரிக்கை மனுக்களை அளிக்கும் தொழில் சங்கங்களுக்கு திமுக நெருக்கடி கொடுக்கிறது. திமுகவின் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 38 பேர் உள்ளனர். தமிழக மக்களின் ஜீவாதார உரிமைகளான காவிரி, முல்லைப் பெரியார், கட்சத்தீவு ஆகியவற்றிக்கு குரல் கொடுக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் திமுக வாக்கு சேகரிக்க கூட உரிமையில்லை. இரட்டை இலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் தெளிவாக தீர்ப்புகளை அளித்துவிட்டது. பன்னீர்செல்வம் விரக்தியின் உச்சத்தில் பேசி வருகிறார்.

அதிமுகவில் ஒழுங்க நடவடிக்கைக்கு உள்ளான ஒருவர் எப்படி இரட்டை இலையை கோர முடியும். பன்னீர்செல்வத்தின் உண்மையான முகம் தற்போது தான் தெரிய வருகின்றது. பன்னீர்செல்வம் இவ்வளவு நாளாக போலி முகத்துடன் செயல்பட்டு உள்ளார். பன்னீர்செல்வத்திற்கு மன குழப்பம் உள்ளது. அவருக்கு மூளை குழம்பியுள்ளது. அவர் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.

நேற்று வரை பெரிய பொறுப்பில் இருந்தவர் பாவம். திடீரென பொதுக்குழு எடுத்த ஒழுங்கு நடவடிக்கை காரணமாக அதிர்ச்சிக்கு உள்ளாகி, நிராயுதபாணியாக உள்ளார். அதிமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டு விட்டது. பாஜகவுடன் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என எடப்பாடியார் தெளிவாக கூறிவிட்டார்.

அண்ணாவை, அம்மாவை பற்றி அண்ணாமலை பேசிய பின்னரும், தன்மானத்தை இழந்து எங்களால் அவர்களுடன் இருக்க முடியாது. அதிமுக இயக்கத்தின் மதிப்பீடு அவருக்கு தெரியவில்லை. கவுன்சிலர் கூட ஜெயிக்காதவர் அவர். அரசியல் அனுபவம் அவருக்கில்லை.

தேர்தலில் நின்று வென்றால் தான் பக்குவம் வரும். லேகியம் விற்பவர் மாதிரி பேசி கொண்டிருக்கிறார். அதிமுகவை அழிக்க அண்ணாமலை அல்ல, அவரது அப்பனே வந்தாலும் முடியாது. இது 2 கோடி தொண்டர்களின் எச்சரிக்கை. ஆண்டவனே வந்தாலும் அதிமுகவை தொட்டுப்பார்க்க முடியாது. இதற்காக என்ன வந்தாலும் 2 கோடி தொண்டர்கள் எந்த தியாகமும்  செய்ய தயாராக இருக்கிறோம். அதிமுக இல்லையென்றால் சாமானிய மக்கள் எதிர்காலம் கேள்விக்குறியாய் இருக்கும்.

பொறுமைக்கு ஒரு அளவு இருக்கிறது தம்பி. நாங்கள் பேச ஆரம்பித்தால் வேஷ்டியை கழட்டி விட்டு நீ ஓடி விட வேண்டும். கட்சிக்கு கட்டுப்பட்டு இருக்கிறோம். அண்ணாமலையிடம் பிரதமர் மோடி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிஜேபி தவிர எந்த கட்சியும் வந்தாலும் தாய் உள்ளதோடு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்போம், என கூறினார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!