அடுத்த விக்கெட் துரைமுருகன்தான்… அ.தி.மு.க.விற்கு வந்ததால் வரவேற்போம் : அமைச்சர் ஜெயக்குமார்..!

8 August 2020, 5:00 pm
jayakumar-durai murugan - updatenews360
Quick Share

தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் அ.தி.மு.க.விற்கு வந்தால் அவரை வரவேற்போம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை மாதவரம் அருகே நடந்து வரும் கொரோனா தடுப்பு முகாமில் அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை அவர் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது :- ராயபுரம், மாதவரம் பகுதிகளில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்குள் நாள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு வருகிறது.

நீர் புகுந்த நெருப்பு தற்போது புகைந்து கொண்டிருக்கிறது. அதில், கு.க. செல்வம் முதல் விக்கெட். இதனால், துரைமுருகன் வருத்தத்தில் உள்ளார். தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவியை அவர் பெரிதும் எதிர்பார்த்துள்ளார். அவருக்கு அந்த பதவி கொடுக்காததால், அநேகமாக அடுத்த விக்கெட் துரைமுருகனாகத்தான் இருக்கும்.

திராவிட இயக்கத்தின் பாசம் அவர் மீது உள்ளதால், அவர் அ.தி.மு.க.விற்க வந்தால் ஏற்றுக் கொள்வோம். அவர் வந்தால் கட்சி நல்ல முடிவு எடுக்கும், அவருக்கு சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்க எங்களின் இயக்கம் தயாராக உள்ளது. பெரிய ஆலமரமாக இருக்கும் அ.தி.மு.க., அதிருப்தியில் இருக்கும் தி.மு.க.வினருக்கு நிகழ் கொடுக்கும், எனக் கூறினார்.

Views: - 3

0

0