நீலகிரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்காக விளம்பர பதாகைகள் : கொரோனா அலர்ட்!!

17 October 2020, 10:09 am
Corona Add - Updatenews360
Quick Share

நீலகிரி : நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏழாம் கட்ட ஊரடங்கில் தமிழக அரசானது பல தளர்வுகளை அளித்துள்ளது இதில் முக்கிய சுற்றுலாத் தலங்களில் உள்ள தோட்டக்கலை துறையின் கீழ் இயங்கும் பூங்காக்கள் திறக்கப்படும் என அறிவித்தது.

அதன்படி நீலகிரி மாவட்டத்திலுள்ள பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன இதனால் பல பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் தனி இ பாஸ் பெற்று நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிகின்றனர்.

இதனிடையே கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பூங்காக்கள் செல்லும் சாலையில் அரசு அறிவித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளான முகக் கவசம் அணிதல், நோய் அறிகுறிகள் தென்படுதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் என அனைத்தையும் கொண்ட பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

Views: - 15

0

0