15 நாட்களுக்கு பிறகு… தமிழகத்தில் நாளை நடக்கும் முக்கிய நிகழ்வு : அரசியல் கட்சிகள் பரபர!!!

Author: Udayachandran RadhaKrishnan
25 January 2023, 7:45 pm

குடியரசு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சென்னை கடற்கரை சாலையில் காந்தி சிலை அருகே கவர்னர் தேசியக்கொடி ஏற்றுவது வழக்கம்.

தற்போது அந்த இடத்தில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருவதால் கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே கொடியேற்று விழா நடைபெறுகிறது.

இந்த ஆண்டு குடியரசு தினவிழாவை வெகு விமரிசையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதால் அதற்கு ஏற்றபடி உழைப்பாளர் சிலை பகுதியில் பிரமாண்ட பந்தல்கள் அமைக்கப்பட்டு கொடி கம்பமும் உருவாக்கப்பட்டுள்ளது.


முக்கியஸ்தர்கள் அமருவதற்காக சாலை ஓரத்தில் பந்தல்களும் போடப்பட்டுள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி நாளை தேடிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.

இதைத்தொடர்ந்து விழா மேடையில் கவர்னர் ஆர்.என்.ரவியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அருகருகே அமர்ந்து அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பை கண்டு களிப்பார்கள்.

பல்வேறு அரசுத்துறைகளின் ஊர்திகள், அரசு நலத்திட்டங்களை விளக்கும் வகையிலான அலங்கார ஊர்திகள் இதில் அணிவகுத்து வரும். இறுதியாக பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகளின் பாரம்பரிய நாட்டியம் உள்ளிட்ட ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். சுமார் 30 நிமிட நேரம் நடைபெறும். இந்த நிகழ்ச்சிகளை கவர்னரும், முதலமைச்சரும் அருகருகே இருந்து பார்க்க உள்ளனர்.

ஆளுநருடனான கருத்து மோதல், சட்டசபையில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம், தமிழகம் தமிழ்நாடு சர்ச்சை என ஆளுநர் மீது குற்றச்சாட்டுகளை ஆளுங்கட்சிகளும் கூட்டணி கட்சிகளும் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் சட்டசபையில் நடந்த நிகழ்வுக்கு பின் 15 நாட்கள் கழித்து முதலமைச்சரும் ஆளுநரும் நேருக்கு நேர் சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?