ஆக்ரோஷமான கடல் அலை : எண்ணூர் – பழவேற்காடு சாலை துண்டிப்பு!!

26 November 2020, 11:08 am
Road Blocked - Updatenews360
Quick Share

திருவள்ளூர் : நிவர் புயலால் தொடர் கனமழை காரணமாக பழவேற்காடு கடலிலிருந்து எண்ணூர் பழவேற்காடு சாலையில் புகுந்த கடல் நீரால் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் கனமழை காரணமாக பழவேற்காடு கடலிலிருந்து அலையின் சீற்றம் காரணமாக எண்ணூர் பழவேற்காடு சாலையில் பழைய முகத்துவாரம் பகுதியில் இருந்து புகுந்த கடல் நீரால் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

கடல் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அருகிலுள்ள கோரைக் குப்பம் மீனவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் காட்டுப்பள்ளி காளாஞ்சி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அவ்வழியாக செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் பொது மக்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய் துறையினர் 36 பாதுகாப்பு மையங்களில் சுமார் 1309 பேரை பாதுகாப்பாக கொண்டு வந்து தங்க வைத்து அவர்களுக்கு உணவு உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டிருந்த பேருந்து சேவை தொடங்கியது. இருப்பினும், மாநகர பேருந்துகள் குறைந்தளவில் இயக்கப்படுகின்றன.

Views: - 0

0

0