சிலம்பம் சுற்றிய அதிமுக வேட்பாளர் கே.ஆர் ஜெயராம் : பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
29 March 2021, 10:36 am
Silambam Admk Candi -Updatenews360
Quick Share

கோவை : சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.ஜெயராம் சிலம்பம் சுற்றி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சி வேட்பாளர்களும் பொதுமக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கோவையில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் கே.ஆர்.ஜெயராம் தினமும் வித்தியாசமான முறையில் மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

காய்கறிகள் விற்பனை செய்வது, ஆட்டோ ஓட்டுவது என்று மக்களிடம் வாக்கு சேகரிக்கும் அவர் இன்று சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட மசக்காளிபாளையம் பாலன் நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அவருக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து அங்கு சிலம்பம் சுற்றி மக்களிடையே வாக்கு சேகரித்தார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் வீடு வீடாக பிரச்சாரம் மேற்கொண்சார்.

அப்போது அப்பகுதி தொண்டர் ஒருவர் ஜெயராமுக்கு போர் வீரன் சிலை ஒன்றை பரிசாக வழங்கினார்.

Views: - 70

1

0