பள்ளிவாசலில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் கே.ஆர் ஜெயராம் : நோட்டீஸ் விநியோகித்து பரப்புரை!!

Author: Udayachandran RadhaKrishnan
26 March 2021, 6:55 pm
Admk Candidte Masjid -Updatenews360
Quick Share

கோவை : சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயராம் தனது தொகுதிக்கு உட்பட்ட உக்கடம், புள்ளுக்காடு பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நோட்டீஸ் வினியோகித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.ஆர். ஜெயராம் தனது தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் கடந்த ஒரு வார காலமாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக இன்று, இஸ்லாமியர்கள் செறிந்து வாழும் உக்கடம், புள்ளுக்காடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் இர்ஷாதுல் முஸ்லிம் ஷாபியா சுன்னத் ஜமாத் பள்ளி வாசலுக்கு ஜெயராம் சென்றார்.

அங்கு தொழுகை நடத்தி விட்டு வெளியே வந்தவர்களிடம் நோட்டீஸ் விநியோகித்தும், கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு செய்த மக்கள் நலத் திட்டங்களையும், தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்களையும் எடுத்துக்கூறி இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அப்போது நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் எஸ்.பி. அன்பரசன் உடனிருந்தார்.

Views: - 167

0

0