ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்… இணையத்தில் வைரலாகும் பாடலை CM ஸ்டாலினுடன் ஒப்பிட்டு பாடிய அதிமுக கூட்டணி வேட்பாளர் முபாரக்!

Author: Udayachandran RadhaKrishnan
28 March 2024, 6:30 pm

ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்… இணையத்தில் வைரலாகும் பாடலை CM ஸ்டாலினுடன் ஒப்பிட்டு பாடிய அதிமுக கூட்டணி வேட்பாளர் முபாரக்!

உங்கள் பாராளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளரான எஸ்.டி. பி.ஐ கட்சியின் மாநில தலைவர் முகமது முபாரக் நத்தம் சட்டமன்ற தொகுதி செயல்வீரர் கூட்டத்தில் கழக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சிசீனிவாசன், கழகத் துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சருமான இரா விஸ்வநாதன் ஆகியோராக தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டார்.

அப்பொழுது வேட்பாளர் முகமது முபாரக் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை அளித்து என்னை வெற்றி பெற செய்தால் திண்டுக்கல் மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகளை பூட்டி வைத்துள்ள அனைத்து திட்டங்களுக்கும் திறக்கப்படும் சாவியாக நான் இருப்பேன். தற்போது ஐயோ சாமி நீ எனக்கு வேணாம். பொய் பொய்யா பேசி ஏமாத்தினது போதும்.

என்ற பாடல் வலைதளங்களில் வாக்காளர்களாகிய பொதுமக்கள் தற்போது ஸ்டாலின் புகைப்படத்தை வைத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் பாடளை மேடையிலே அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளரான எஸ் டி பி ஐ கட்சி மாநில தலைவர் முகமது முபாரக் பாடி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வேட்பாளர் முகமது முபாரகின் இந்த செயல் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.அமைப்புச் செயலாளர் மருதராஜ், கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் ஆர் வி என் கண்ணன்.கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!