செருப்பு போல உழைப்பேன்… செருப்பிற்கு பாலீஷ் போட்டு வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்

Author: kavin kumar
14 February 2022, 1:33 pm
Quick Share

தருமபுரி: பென்னாகரம் பேரூராட்சி தேர்தலில் செருப்பு தைத்து பாலீஷ் போட்டு அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் வாக்கு சேரிக்க செல்லும் வேட்பாளர்கள் பல்வேறு வகையான யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அதனடிபடையில் டீ போடுவது, பஜ்ஜி சுடுவது, காய்கறி விற்பது என தேர்தல் களம் பரபரப்பாக இருந்து வரும் நிலையில், தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சிக்குட்பட்ட 15 வது வார்டில் போட்டியிட்டுள்ள அதிமுக வேட்பாளர் கிருஷ்ணன் அந்த வார்டு வாக்காளர்களிடம் வீடு வீடாக சென்றும்,

கடைவீதி மற்றும் மக்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு பொது மக்களின் பழுதான செருப்புக்களை வாங்கி அதை தைத்து கொடுத்ததோடு நின்று விடாமல், அதற்கு பாலீஷ் போட்டு கொடுத்துவிட்டு தனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு வாக்கு சேகரித்தார்.

இது மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாய் அமைந்திரருந்தது. அப்போது அவர் செருப்புகள் எப்படி உங்கள் கால்களை பாதுகாத்து உழைக்கிறதோ அப்படி நானும் உங்களுக்காக உழைப்பேன் என தெரிவித்து, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Views: - 354

0

0