அதிமுகவின் 50வது ஆண்டு பொன் விழா: எம்ஜிஆர், ஜெ. சிலைகளுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் மரியாதை..!!

Author: Aarthi Sivakumar
17 October 2021, 12:39 pm
Quick Share

சென்னை: அதிமுகவின் பொன்விழா தினத்தையொட்டி எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதிமுகவின் 50ஆவது ஆண்டு பொன் விழா இன்று கொண்டாடப்படுகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆர், 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார்.

எம்ஜிஆரால் தொடங்கபட்ட அதிமுக அவரது மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா வசம் சென்றது. ஜெயலலிதா இறந்த பிறகு தற்போது அக்கட்சியினை எடப்பாடி பழனிசாமியும் , பன்னீர்செல்வமும் இயக்கி வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக பொன்விழாவையொட்டி சென்னை ராயப்பேட்டையிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் அதிமுக கொடி ஏற்றினர்.

அத்துடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் பொன்விழா மலரை வெளியிட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டமும் நடைபெற்றது. நடப்பாண்டு முழுவதும் அதிமுக பொன்விழா கொண்டாடப்படும் என்றும் இனி அதிமுக தலைமை அலுவலகம் எம்ஜிஆர் மாளிகை என்று அழைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 227

0

0