அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார் : அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் “Opinion“!!

By: Udayachandran
1 October 2020, 2:11 pm
Minister Vellamandi- updatenews360
Quick Share

திருச்சி : அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

திருச்சியில் அம்மா நகரும் நியாய விலை கடை தொடக்க விழாவில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு நடமாடும் நியாயவிலைக் கடை வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வெல்லமண்டி நடராஜன், சாதாரண கடைநிலை தொண்டனும் அமைச்சராக முடியும் என்பது அதிமுகவில் நிதர்சனமான உண்மை. இதற்கு நானும், அமைச்சர் வளர்மதியுமே நல்ல உதாரணம் என்றார்.

மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர். விவசாயியான அவர் தற்போது முதல்வராக உயர்ந்துள்ளார்.

தலைமை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஒன்று கூடி அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று முடிவெடுப்பார்கள் அந்த முடிவுக்கு நாங்கள் அனைவரும் கட்டுப்படுவோம் என்றார்.

முதல்வர் வேட்பாளர் குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது அவருடைய சொந்தக் கருத்து அது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை எனக் கூறிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சசிகலா குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

நகரும் நியாய விலை கடையில் ஒரு விற்பனையாளர், டிரைவர் உள்ளனர். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடமாடும் கடையை செயல்படும். திருச்சியை பொருத்தவரை ஏற்கனவே துறையூர் அருகில் உள்ள பச்சைமலை மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் இந்த நடமாடும் நியாய விலை கடை செயல்பட்டு வருகிறது.

திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை பகுதிநேரமாக செயல்படும் கடைகளும் மற்றும் குறைவான எண்ணிக்கையில் குடும்ப அட்டைதாரர்கள் உள்ள பகுதிகளுக்கும் 105 நடமாடும் நியாய விலை செயல்படுகிறது. இதன் மூலம் 15744 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 30

0

0