தருமபுரியில் குவிந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. தீவிர வாக்கு சேகரிப்பு : கூட்டத்தில் நடந்த சலசலப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
6 April 2024, 7:43 pm

தருமபுரியில் குவிந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. தீவிர வாக்கு சேகரிப்பு : கூட்டத்தில் நடந்த சலசலப்பு!

அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆஇஅதிமுக அணியில் தருமபுரி பாராளுமன்ற தொகுதியில் டாக்டர் அசோகன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக மாவட்டம் முழுதும் அதிமுகவினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

நிலையில் இன்று பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெத்தூர் பகுதியில் அஇஅதிமுக வேட்பாளர் பிரச்சாரத்திற்கு சென்ற போது அங்கு கட்டப்பட்டிருந்த அதிமுக கட்சி கொடிகள் தலைகீழாக தொங்கவிடப்பட்டதை அறியாமல் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் கேபி அன்பழகன் முல்லைவேந்தன் சட்டமன்ற உறுப்பினர்கள் கோவிந்தசாமி சம்பத்குமார் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் வேட்பாளருக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் செய்து விட்டு சென்றனர்.

அதிமுக கட்சிக்கொடி தலை கீழாக தொங்க விடப்பட்டு கட்டப்பட்டிருந்ததை அறியாமல் வேட்பாளர் ஆதரவாக அதிமுக முன்னணியினர் தேர்தல் பிரச்சாரம் செய்ததை அப்பகுதி மக்களும் மற்ற அரசியல் கட்சியினரும் ஏளனம் செய்தனர்.

தங்களது கட்சி கொடி தலைகளாக கட்டப்பட்டிருந்ததையே கவனிக்காத வேட்பாளர் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு சென்று என்ன செய்யப் போகிறார் என்று அப்பகுதி பொதுமக்களும் வாக்காளர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?