தீய சக்தி திமுகவை ஒழிக்கும் வரை அதிமுக ஓயாது : எம்ஜிஆர் வசனத்தை பேசிய அமைச்சர்!!
20 January 2021, 4:33 pmமதுரை : தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி அமைய அனைவரும் உறுதுணையாக இருந்து உழைப்போம் என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
மதுரை ஆரப்பாளையம் பகுதியில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கினார்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது 2 கோடியே 8 லட்சம் கார்டுகளுக்கு கடந்த 13 ம் தேதி 2 கோடியே 4 லட்சம் குடும்பங்கள் பொங்கல் பரிசை வாங்கிவிட்டனர். 98.50சதவீதம் வரை நேற்று வரை பொங்கல் பரிசு கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.
திமுக ஆட்சியில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆளுங்கட்சி பணிகள் குறித்து ஆய்வு செய்ய முடியுமா? ஆய்வு செய்ய விட்ட அரசு அதிகாரிகள் பணியாற்றினார்களா? என்பதை மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் வரலாற்றை புரட்டி பார்க்க வேண்டும் என்றார்.
ஸ்டாலின் எதைத்தான் சொல்லவில்லை,அவர் சொல்வதே அவச்சொல் தான் என்று கூறிய அவர், சசிகலா குறித்து கேள்வி எழுப்பியதற்கு எல்லோரும் உறவோடு தான் இருந்தோம், ஜெயலலிதா இருந்தபோது உறவோடு தான் இருந்தோம், இனிமேல் தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி அமைய அனைவரும் உறுதுணையாக இருந்து உழைப்போம் என்று கூறினார்..
0
0