“தல தீபாவளி கிடையாது…இது தல பொங்கல்”: வலிமை ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

Author: Aarthi Sivakumar
22 September 2021, 12:13 pm
Quick Share

தல அஜித் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக உள்ளார். இருந்தாலும் அவர் தனக்கென ரசிகர் மன்றம் இருப்பதை விரும்ப மாட்டார். படத்தின் ப்ரோமோஷனுக்கு கூட கலந்து கொள்ளாத இவர் உதவி என்று வருபவர்களுக்கு, “இல்லை” என்றே கூறுவது இல்லை.

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்ற கெத்தில் பல வருடங்களாக முன்னணி நடிகராக இருக்கிறார் அஜித். அமராவதி தொடர்ந்து இறுதியாக வெளியான நேர்கொண்ட பார்வை வரை அஜித் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார்.

தற்போது வலிமை படத்தின் ரிலீஸ் தேதி தீபாவளி ஆயுத பூஜை கிறிஸ்துமஸ் என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருந்தனர் இந்த நிலையில் நாளை படத்தின் Glimpse என சில நொடிகள் மட்டும் வலிமை படத்திலிருந்து வெளியிடப் போகிறோம் என்று நெட்டிசன்கள் தகவல்களை பரப்பி வர, படத்தின் ரிலீஸ் டேட் பொங்கல் என்று அதிரடியாக போனி கபூர் தற்போது அறிவித்துள்ளார்.

தல தீபாவளி இல்லை என்றாலும் தல பொங்கலுக்கு சிறப்பா பொங்க வெச்சிடுவோம்.. என்று மாஸ் காட்டி வருகிறார்கள் தல ரசிகர்கள்.

Views: - 313

6

0