அழகிரியின் அடுத்த அதிரடி ஆட்டம் : ஸ்டாலினின் முதல்வர் கனவுக்கு ஆப்பு!!

17 January 2021, 10:11 am
Alagiri Stalin - Updatenews360
Quick Share

எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை ஆனால் எதிரி வென்று விடக் கூடாது என ஸ்டாலினை பற்றி அழகிரி அதிரடி முடிவு எடுத்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. முதல்முறையாக தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் இல்லாத தேர்தலை அதிமுக, திமுக எதிர்கொள்ள உள்ளது.

Alagiri - Can the strongman of Madurai actually shake Stalin's DMK rise?

ஆளும் கட்சிக்கு எப்போதும் எதிரியாக உள்ள திமுக இந்த முறை ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு வியூகங்களை அமைத்து வருகின்றனர். இந்த நிலையில் கருணாநிதி இருந்த போதே கட்சியில் இருந்து துரத்தப்பட்ட அழகிரி, மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி தனது தம்பியான ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார்.

My supporters won't let you become CM': Alagiri warns sibling and DMK chief  Stalin | Hindustan Times

திமுக மீது அதிருப்தியில் உள்ளவர்கள், திமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டவர்களை அழகிரி ஆதரவாளர்கள் தொடர்பு கொண்டு அழகிரிக்காக ஆதரவு கோரி வருகின்றனர். மேலும் ஒரு சிலரிடம் அழகிரியே போனில் பேசி பேச்சுவார்த்தை நடத்துகிறாராம்.

இதனால் திமுகவினர் கதிகலங்கி போயுள்ளனர். குறிப்பாக அழகிரி தன்னை நம்பியவர்களை ஏமாற்றதவர் என்பதால், திமுகவில் இருந்து விலகுபவர்கள் அழகிரியுடன் இணைய அதிக ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

Alagiri warns Stalin of 'consequences' if he is not included in DMK | India  News | Zee News

திமுகவில் இருந்து ஓரங்கப்பட்ட அழகிரி இதுவரை மௌனம் காத்து வந்தார். ஆனால் அவர் வெளியே வந்தததும், பல கட்சிகள் அவரை மீண்டும் அரசியலில் வர அழைத்தது. ஆனால் திமுக தன்னை மீண்டும் அழைக்கும் என காத்திருந்தார். ஆனால் அழகிரியின் மவுனத்தை ஸ்டாலின் கண்டுகொள்ளமல் இருந்ததால் என்னவோ தற்போது அழகிரி அடுத்த அதிரடியில் குதித்து விட்டார்.

Cadre rally behind Stalin at Tiruchy meet- The New Indian Express

அழகிரிக்கு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை ஆனால் ஸ்டாலின் வெற்றி தட்டி பறிக்க வேண்டும் என்ற எண்ணத்தின் தனது ஆதரவாளர்களை 75 முதல் 100 தொகுதிகளில் நிறுத்த திட்டமிட்டுள்ளார்.

M. K. Alagiri - Wikipedia

இவர்களால் வெற்றி பெறவில்லை என்றாலும் ஓட்டை பிரிக்க முடியும் என்பதால் சுலபமாக ஸ்டாலினின் முதல்வர் கனவை தர்க்க இந்த முயற்சி என்று அவரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே அழகிரி நடத்திய ஆலோசனை கூட்டத்தால் அதிருப்தியில் உள்ள திமுகவினர், தற்போது கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Views: - 12

0

0