மதுபானங்களின் விலையை உயர்த்திய அரசு: மதுபிரியர்கள் பேரதிர்ச்சி..!

14 July 2021, 11:26 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் மூன்று வருடங்களுக்கு பிறகு மதுபான விலையை உயர்த்தி இருப்பது மதுபிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

புதுச்சேரியில் 450-க்கும் மேற்பட்ட மதுபான கடைகள், 96 சாராயக் கடைகள், 75 கள்ளு கடைகள் உள்ளன. ரம், பிராந்தி, விஸ்கி, ஒயின், பீர், ஓட்கா என மொத்தம் 1300-க்கும் மேற்பட்ட மதுவகைகள் விற்பனையாகிறது. 2017க்கு பிறகு புதுச்சேரி அரசு கலால்துறை, திடீரென்று கலால்வரியை கடந்த 2019 பிப்ரவரியில் உயர்த்தியது. பின்னர் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்துகொரோனாவரி விதிக்கப்பட்டு, தமிழகத்துக்கு இணையாக மதுபானங்கள் விலை இருந்தன.இந்நிலையில் கொரோனா வரி கடந்த மாதம் நீக்கப்பட்டு விலை குறைந்தது.

இந்நிலையில் கலால்துறை புதிய உத்தரவை இன்று இரவு பிறப்பித்தது. கலால்துறை துணை ஆணையர் சுதாகர் பிறப்பித்துள்ள உத்தரவில், “புதுச்சேரியில் விற்கப்படும் இந்திய தயாரிப்பு அல்லது வெளிநாட்டு தயாரிப்பு அல்லது இறக்குமதி செய்யப்படும் அனைத்து மதுபானங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் இருந்து 20 சதவீதம் விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

புதுச்சேரியில் கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு மதுபான விலை உயர்த்தப்பட்டது. தற்போதுமூன்று வருடங்களுக்கு பிறகு மதுபான விலையை உயர்த்தி இருப்பது மதுபிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. சுற்றுலா நகரமான புதுச்சேரியில் மற்ற மாநிலங்களில் விட மதுபானங்களின் விலை குறைவாகவே இருக்கும், அதே போல் மதுபானங்களின் விற்பனையே மாநிலத்தின் முக்கிய வருவாயாக இருக்கும் நிலையில், வருவாய்க்கு ஏற்ப மதுபான விலை உயர்த்தப்படும். அண்டை மாநிலத்திற்கு இணையாக புதுச்சேரியில் மதுபானங்களின் விலை உயர்ந்து இருப்பது சுற்றுலா பயணிகளின் வருகையை குறைக்கும் என வர்த்தகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்

Views: - 327

1

0