கூட்டணி என்பது தோளில் போடும் துண்டு மாதிரி : பாமக விலகல் குறித்து செல்லூர் ராஜு விமர்சனம்!!!

By: Udayachandran
15 September 2021, 1:02 pm
Sellur Raju -Updatenews360
Quick Share

மதுரை : கூட்டணி என்பது தோலில் போடும் துண்டு மாதிரி, தேவையென்றால் துண்டை தோலில் போட்டு கொள்ளலாம், தேவையில்லை என்றால் கழட்டி வைத்து கொள்ளலாம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 113 வது பிறந்த நாளையொட்டி மதுரை சிம்மக்கல்லில் உள்ள அண்ணாவின் சிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் கே.ராஜு, அண்ணாவின் கொள்கைள், சித்தாந்தத்தை தாங்கி பிடித்து அதிமுக செயல்பட்டு வருகிறது, அண்ணா உருவாக்கிய அதிமுக தமிழகத்தில் மிக சிறப்பாக செயல்படுகிறது.

அதிமுக ஏழை, எளிய மக்களுக்கு மட்டுமே செயல்படுகிறது. அண்ணாவின் எண்ணத்தை எடப்பாடியார் செயல்படுத்தி வருகிறார், திமுகவின் திட்டங்கள், செயல்பாட்டுகளை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

உதயநிதி, கனிமொழி, முதல்வர் ஸ்டாலின் சொன்னது போல நீட் தேர்வை ரத்து செய்யவில்லை. நீட் தேர்வு ரத்து செய்யாததற்கு திமுக தலைமையிலான தமிழக அரசே பொறுப்பு ஏற்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக ஆட்சியில் சட்ட மசோதா கொண்டு வந்தோம்.

திமுக கொண்டு வந்த நீட் தேர்வு சட்ட மசோதாவில் ராஜன் கமிட்டி பரிந்துரை மட்டும் இணைக்கப்பட்டு உள்ளது. திமுக கொண்டு வந்துள்ள நீட் தேர்வு சட்ட மசோதாவை திமுக எப்படி செயல்படுத்த போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

பின்னா பாமக தனித்து போட்டியிடுவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, கூட்டணி என்பது தோளில் போடும் துண்டு மாதிரி, துண்டை தேவையென்றால் தோளில் போட்டு கொள்ளலாம், தேவையில்லை என்றால் கழட்டி வைத்து கொள்ளலாம்.

அதிமுக எந்தவொரு காலகட்டத்திலும் கூட்டணியை நம்பி இருந்ததில்லை, மக்கள், ஆட்சியில் செய்த திட்டங்கள், தொண்டர்களை நம்பியே அதிமுக உள்ளது. கூட்டணி என்பது சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் தான் எடுபடும்.

உள்ளாட்சி தேர்தல் என்பது அந்தந்த உள்ளாட்சி அமைப்பில் உள்ள செல்வாக்கை பொறுத்து அமையும், எனவே பாமக தனித்து போட்டியிடுவதால் வருத்தம் இல்லை என கூறினார்.

Views: - 142

0

0