அம்பேத்கர் படம் சேதம் : திமுக பிரமுகர் மீது புகார்!!

7 September 2020, 11:05 am
Ambdekar DMK - updatenews360
Quick Share

கோவை : கோவையில் அம்பேத்கர் புகைப்படத்தை சேதப்படுத்திய திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோவை கீரணத்தம் பகுதியை சேர்ந்தவர் இளங்கேவன் (வயது 48). இவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

நான் எனது வீட்டின் அருகே வெற்றிலைக்கடை நடத்தி வருகிறேன். அங்கு திமுக பிரமுகர் கருப்புசாமி என்பவர் அடிக்கடி வந்து தகராறு செய்து வந்தார். இந்த நிலையில், இன்று காலை கடைக்கு சென்ற போது கடையின் டேபில்கள் உடைக்கப்பட்டிருந்தது.

மேலும், அருகிலிருந்த அம்பேத்கர் புகைப்படமும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. எனவே சம்மந்தப்பட்ட நபர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 9

0

0