அம்பேத்கரின் 131வது பிறந்த நாள் : கோவை மாவட்ட ஆட்சியர் மலர் தூவி மரியாதை

14 April 2021, 11:28 am
Quick Share

கோவை: அம்பேத்கரின் 131 வது பிறந்த தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்தியா முழுவதும் இருந்த ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பாடுபட்டவர் பாபாசாகேப் டாக்டர்.அம்பேத்கர். இவர் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் நாள், மத்தியபிரதேசத்தில் பிறந்தார்.

பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் நாடு போற்றும் அளவுக்கு உயர்ந்த இவரே இந்தியா சுதந்திரம் அடைந்த பின், அரசியலமைப்பு சட்டத்தை இயற்றினார். மேலும், சட்ட அமைச்சராகவும், அரசியலமைப்பின் வரைவுக் குழு தலைவராகவும் பதவி வகித்தார்.

அம்பேத்கரின் 131வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பல்வேறு அமைப்பினர் அவரது திருவுருவச்சிலைக்கும், புகைப்படத்திற்கும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு மாவட்ட ஆட்சியர் நாகராஜன், மாவட்ட வருவாய் அலுவலர், மக்கள் செய்தித்தொடர்பு துறை அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Views: - 25

0

0