ஆம்புலன்சில் ஏறி அடாவடி செய்த “சொர்ணாக்கா“ : ஆப்பு வைத்த போலீஸ்!!

7 November 2020, 4:30 pm
Ambulance Prob - Updatenews360
Quick Share

கோவை : கடையை காலி செய்ய மறுத்த பெண்ணிடம் ஆட்களை வைத்து அடவாடித்தனத்தில் இறங்கி கடை உரிமையாளர் ஆம்புலன்சில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை அடுத்த வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி என்பவர் சொந்தமாக கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார். அதில் ஒரு கடையில் மளிகை கடையை போட்டு நடத்தி வருபவர் லட்சுமி.

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இந்த கடையை வாடகைக்கு எடுத்து மளிகை கடை நடத்தி வரும் லட்சுமியிடம், 40 நாட்களுக்குள் கடையை காலி செய்ய புவனேஸ்வரி கூறியுள்ளார்.

திடிரென கடையை காலி செய்ய மறுத்த லட்சுமி, உடனே நீதிமன்றம் சென்று கடை காலி செய்ய ஸ்டே ஆர்டர் வாங்கியுள்ளார். இதனால் புவனேஸ்வரிக்கும் – லட்சுமிக்கும் இடையே புகைச்சல் ஏற்பட்டது.

இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவு 1 மணி அளவில் புவனேஸ்வரி தனது ஆட்களை அழைத்துக் கொண்டு லட்சுமியின் கடையில் இருந்த பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார். இதையடுத்து காலையில் கடையை திறக்க வந்த லட்சுமி அதிர்ச்சியடைந்து, துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து புகாரளித்ததால் ஆத்திரமடைந்த புவனேஸ்வரி, கடையின் கட்டிடத்தையே இடித்து தள்ள முடிவு செய்தார். இதற்காக ஜேசிபி வாகனத்தை வரவைத்து கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது இதை தடுக்க வந்த லட்சுமி உள்ளிட்ட 3 பேரையும் அடித்து தாக்கியுள்ளார். இதில் லட்சுமி, அவரது சகோதரி மற்றும் ஊழியர் ராஜசேகர் ஆகியோர் காயமடைந்தனர்.

இதையடுத்து காயமடைந்தவர்களை கண்ட அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்சை வரவழைத்தனர். உடனே வந்த ஆம்புலன்சில் காயமடைந்தவர்களை ஏற்றுவதற்கு முன்பே, புவனேஸ்வரி அமர்ந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தார். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கூறியும் அடவாடியாக இறங்க மறுத்துவிட்டார்.

ஆவேச லட்சுமியை அடக்க முடியாமல், காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உடனே வந்த காவல்துறையினர் புவனேஸ்வரியை கீழே இறக்கிவிட்டனர். இது தொடர்பான காட்சிகளை அப்பகுதியில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து வலைதளங்களில் வெளியிட்டனர்.

ஆபத்தில் உள்ளவர்களை பார்த்து மனிதநேயத்தை மறந்த புவனேஸ்வரி தனது காரியத்தில் குறியாக இருந்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. புவனேஸ்வரியை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 29

0

0