பச்சிளம் குழந்தைக்காக உயிரை பணயம் வைத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் : 40 நிமிடத்தில் 70 கி.மீ திக் திக் பயணம்.. குவியும் பாராட்டு!!

2 July 2021, 4:12 pm
Ambulance driver - Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலத்தில் பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை தன் உயிரை பணையம் வைத்து காப்பாற்றிய தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அங்கனங்கவுண்டன் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ். இவரது மனைவி சௌமியா. நிறைமாத கர்ப்பிணியான சௌமியா கடந்த சில தினங்களுக்கு முன்பு சத்தியமங்கலம் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டிருந்தார்.

அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமுடன் இருந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து குழந்தையை உடனடியாக மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

பிறந்த மூன்று தினங்களே ஆன நிலையில் குழந்தையின் இதயத்துடிப்பு சரியாக இல்லாததைக் கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தையின் உயிரைக் காப்பாற்ற கண்ணீருடன் பெற்றோர் இருந்த நிலையில் சத்தியமங்கலம் ரீலீப் டிரஸ்ட் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நவீன் தனது உயிரை பணயம் வைத்து சத்தியமங்கலத்தில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கோவை தனியார் மருத்துவமனைக்கு 40 நிமிடங்களில் அதிவிரைவாக ஆம்புலன்ஸ் வாகனத்தை இயக்கி குழந்தையை பத்திரமாக கொண்டு வந்து சேர்த்தார்.

உரிய நேரத்தில் குழந்தை மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டததால் தற்போது குழந்தை நன்றாக உள்ளது. இவர்களை போன்ற மனிதர்கள் இருப்பதால்தான் மனிதம் இன்னும் வாழ்கிறது.

Views: - 258

0

0