‘நீ எங்க வேணா போய் சொல்லு… பயப்பட மாட்டேன்’… வயிறு வலியோடு வந்த நோயாளி.. அலைக்கழிக்க வைத்த மருத்துவர்!!

Author: Babu Lakshmanan
12 January 2024, 12:03 pm

வயிற்று வலி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வந்த பெண் நோயாளியை அலைக்கழித்த மருத்துவர், அலட்சியமாக பதில் அளித்த சம்பவம் சக நோயாளிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுண்ணாம்புகாளை பகுதியைச் சேர்ந்தவர் சபீர் அகமது. இவரது மனைவி மொகரம், இவருக்கு நேற்று இரவு திடீரென வயிற்று வலி ஏற்பட்டு, ஆம்பூர் அரசு மருத்துவமனையில் இரவு 11 மணிக்கு சிகிச்சைக்காக சென்ற நிலையில், அங்கு மருத்துவமனையில் மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், வலியால் துடித்த மொகரத்திற்கு மருத்துவமனை ஊழியர் ஒருவர் ஊசி செலுத்தி காத்திருக்கும் படி கூறியுள்ளார். இருப்பினும், வயிற்று வலி அதிகமானதால் அப்பெண்ணின் உறவினர்கள் உடனடியாக அங்கு பணியில் இருந்த மருத்துவரிடம் இதுகுறித்து கூறியுள்ளனர்.

அப்போது, பணியில் இருந்த மருத்துவர் கார்த்திகேயன் என்பவர் நோயாளிக்கு சிகிச்சை அளிக்காமல் சுமார் ஒன்றரை மணி நேரம் காத்திருக்க வைத்து அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் மருத்துவரிடம் கேள்வி எழுப்பிய போது, “இங்கு இப்படித்தான், நான் ஒரு எலும்பு மருத்துவர். என்னால் இதற்கெல்லாம் சிகிச்சை அளிக்க முடியாது, எதையாவது ஒரு ஊசியை குத்தி இவர்களை இங்கிருந்து அப்புறப்படுத்துங்கள். அல்லது நான் பரிந்துரைக்கிறேன், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்,” என ஏளனமாக கூறியுள்ளார்.

மேலும், இந்த காய்கறி கடை சரியில்லை என்றால் அருகாமையில் உள்ள காய்கறிக்கு கடைக்கு சென்று காய்கறிகளை வாங்குவதில்லையா? அதேபோலத்தான் இந்த மருத்துவமனையில் இப்போது மருத்துவர் இல்லை, நீங்கள் வேறு மருத்துவமனையில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள் என நோயாளிடமும், நோயாளி உறவினர்களிடமும் ஏளனமாக மருத்துவர் கார்த்திகேயன் பேசுவது போன்ற வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

இதுகுறித்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த பெண் நோயாளி மொகரம் அளித்துள்ள பேட்டியில், இரவு 11 மணி அளவில் சாதாரண வயிற்று வலிக்காக சிகிச்சைக்காக வந்த எனக்கு சரியான சிகிச்சை அளிக்காமல், சோதனை மேற்கொள்ளாமலேயே அடுக்கம்பாறைக்கு பரிந்துரை செய்து தருகிறேன் என மருத்துவர் கூறினார்.

தேசிய தரம் வாய்ந்த மருத்துவமனை என கூறப்படும் அரசு மருத்துவமனை மருத்துவர் இல்லாமல், மருத்துவ உதவியாளர் சிகிச்சை அளிப்பதும், மேலும் பணியில் இருந்த மருத்துவர், காய்கறி கடைகளை ஒப்பிட்டு அரசு மருத்துவமனையை பேசினார்.

இங்கு இப்படித்தான் நீ யாரை வேண்டுமானாலும் கூட்டி வா பார்த்துக் கொள்கிறேன் என மிரட்டும் தொணியில் பேசிய மருத்துவர் மீது அரசு துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!