தமிழகம் ஒரு ஆன்மீக பூமி…கோவை ஈஷா மஹாசிவராத்திரியில் அமித்ஷா பேச்சு..!

Author: Selvan
26 February 2025, 10:09 pm

மக்கள் வெள்ளத்தில் கோவை ஈஷா

கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, இவ்விழாவை பக்தியின் மஹாகும்பமேளாவாக புகழ்ந்தார். அவர், ஆன்மீக பணிகளில் ஈடுபட்டு உலகளவில் ஈஷா யோகா மையம் மகத்தான மாற்றத்தை உருவாக்கி வருவதை பாராட்டினார்.

சத்குரு உருவாகியிருக்கும் இந்த இடம் பக்திக்கான இடமாக மட்டுமில்லாமல் யோகம் ஆத்ம சாதனை,தன்னைத்தானே உணர்தல் ஆகியவற்றிக்கான இடமாகவும் உள்ளது.
அமித் ஷா, ஆதியோகி தரிசனம் பெருமையுள்ளதாகவும், இந்தியாவில் சிவ வழிபாடு தீவிரமாக வளர்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

Amit Shah at Isha Mahashivratri

சத்குருவின் “மண் காப்போம்” இயக்கம் மற்றும் ஆன்மீக விழிப்புணர்வு நடவடிக்கைகளை பாராட்டி, அவரை “இந்தியாவுக்கு கிடைத்த மகத்தான பொக்கிஷம்” என வர்ணித்தார்.உலகத்தை மாற்ற வேண்டும் என்றால் முதலில் உங்களை நீங்கள் மாற்ற வேண்டும் என்பதை சத்குரு நமக்கு உணர்த்திக்கொண்டே வருகிறார்.

முன்னதாக ஈஷா மஹாசிவராத்திருக்கு அனைவரையும் வரவேற்று சத்குரு பேசினார்,அதில் நாட்டின் சட்ட ஒழுங்கை பாதுகாத்து கொண்டு செல்லும் உள்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்ததோடு, அமித்ஷா சர்தார் வல்லபாய் பட்டேல் போல நாட்டை ஒன்றாக இணைத்துக் கொண்டிருக்கிறார் என்று கூறினார் ஆர்டிகள் 307 நீக்கம் மூலம் காஷ்மீரை இந்தியாவின் பாகமாக கொண்டு வந்தார்,நாட்டின் சட்டம் மற்றும் இறையாண்மையை சரியாக நெறிப்படுத்தி கொண்டு செல்கிறார்.

இந்த மஹாசிவராத்திரி எந்த மதத்திற்கும் சிறப்பாகியதல்ல, மனிதகுலத்திற்கே உரிய ஆன்மீக நிகழ்வு, நீங்கள் மனிதராக இருந்து உங்கள் முதுகெலும்பு நிமிர்ந்து இருந்தால் ஆதியோகி உங்களுக்கானவர்,இந்த ஆதி யோகி இன்னும் நாட்டில் பல்வேறு பகுதிகளில் வர உள்ளார் என்று சத்குரு உரையாற்றினார்.

Adiyogi Mahashivratri 2025

அதன் பிறகு “மிராக்கிள் ஆப் தி மைண்ட்” செயலியை சத்குரு வெளியிட்டு அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலகத்தில் 300 கோடி மக்களை தியானத்தில் ஈடுபட வைப்பதே எங்களுடைய லட்சியம் என தெரிவித்தார்,நிகழ்வில் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த தீட்சைகள் வழங்கப்பட்டன.

ஈஷாவிற்கு வருகைதந்த அமித்ஷாவை சூர்யா குண்டா மண்டபம்,நாகா சன்னதி லிங்க பைரவி உட்பட அணைத்து இடங்களுக்கு தரிசனம் செல்ல அழைத்து சென்றார்

விழாவில் ஒடிசா, பஞ்சாப் ஆளுநர்கள், கர்நாடக துணை முதல்வர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரமுகர்கள் சினிமா பிரபலங்கள் பங்கேற்றனர். மேலும் பல்வேறு பிரதேசங்களிலிருந்து வந்த பிரபல கலைஞர்கள் இசை, நடன நிகழ்ச்சிகள் போன்றவை இரவு முழுவதும் மக்களை விழிப்புடன் வைத்திருக்க உள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!