கோவை சர்வதேச விமான நிலையத்தில் கூடுதலாக 7 விமானங்களை நிறுத்தும் வசதி….!!

19 November 2020, 1:22 pm
cbe airport - updatenews360
Quick Share

கோவை விமான நிலையத்தில் கூடுதலாக 7 விமானங்களை நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய இயக்குனர் மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.

கோவை சர்வதேச விமான நிலையம், கோவை உள்ளிட்ட சுற்றுப்புறங்களை சேர்ந்த 7 மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது. விமான நிலைய விரிவாக்கத்தை செயல்படுத்துவதில் மிகுந்த காலதாமதம் நிலவி வருகிறது.

இந்நிலையிலும், பயணிகள் போக்குவரத்து, விமானங்கள் இயக்கம், சரக்கு போக்குவரத்தை கையாளுதல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நிலையான வளர்ச்சியை விமான நிலையம் தக்கவைத்துள்ளது. கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக ஏற்பட்ட தாக்கத்தில் இருந்து மெதுவாக விமான போக்குவரத்து மீண்டு வருகிறது.

விமான நிலையத்தின் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு தற்போது இருக்கும் இடத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகளை விமான நிலைய நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஏற்கனவே விமானநிலையத்தில் பயன்படுத்தி வந்த 2 ஏரோ பிரிட்ஜ் மாற்றியமைக்கப்பட்டன. விமான நிறுத்தமிடங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு, அவை நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த நடவடிக்கைகளால் விமான நிலையம் புதுப்பொலிவு பெற்றுள்ளது. இது குறித்து கோவை சர்வதேச விமான நிலைய இயக்குனர் ஆர்.மகாலிங்கம் கூறியதாவது,

விமானங்கள் நிறுத்துமிடம் கட்டுமானம் பொருத்தவரை ஏற்கனவே 9 ஏப்ரான் உள்ளன. தற்போது கூடுதலாக 7 விமானங்கள் நிறுத்தும் வசதி செய்யப்படுகிறது. இதற்கான இடம் கட்டப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டன. தற்பொழுது அனைத்து பணிகளும் நிறைவடையும் தருவாயில் உள்ளன. மிக விரைவில் இவை செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என அவர் தெரிவித்தார்.

Views: - 0

0

0