அணைக்காமல் போட்ட சிகரெட்டால் பற்றி எரிந்த மின் கம்பம் : போதை ஆசாமிகளால் இருளில் தவிக்கும் கிராமங்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 October 2022, 12:35 pm

திருச்சி : போதை ஆசாமிகள் அணைக்காமல் போட்ட சிகரெட் தீயினால் மின் கம்பம் சேதமடைந்து 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியது.

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே பள்ளிவிடை பகுதியில் உள்ள முள் புதரில் நேற்று மாலை போதை ஆசாமிகள் மது குடித்துவிட்டு சிகரெட் தீயை அணைக்காமல் வீசி சென்றுள்ளனர்.

அப்போது சிகரெட்டில் இருந்த தீ முள் புதரில் பரவி தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அருகில் இருந்த மின் கம்பம், மின் வயர்கள் தீயில் கருகி சேதமடைந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த சமயபுரம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்து கட்டுப்படுத்தினர்.

தொடர்ந்து சமயபுரம் மின்சார வாரிய ஊழியர்கள் சேதமடைந்த மின் கம்பம் மற்றும் வயர்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தினால் கூத்தூர், பாச்சூர் நொச்சியம் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்கள் இன்று அதிகாலை வரை இருளில் மூழ்கியது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?