90’S கிட்ஸ் ஃபேவரைட் VJ ஆனந்த கண்ணன் திடீர் மரணம் ! காரணம் என்ன ?
Author: Babu Lakshmanan17 August 2021, 8:20 am
2000 காலகட்டத்தில் 90ஸ் கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலமானவர் VJ ஆனந்த கண்ணன், சன் டிவியில், சன் மியூசிக்கில், என சன் குழுமத் தொலைக்காட்சி செய்தியில் கலக்கிக் கொண்டிருந்த இவர் நடுவில் என்ன ஆச்சு என ஆள் அட்ரஸ் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் பின்னர் வெளிநாடுகளிலும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இதனிடையே சன். டி.வி.யில் ஒளிபரப்பான சிந்துபாத் தொடரிலும் நாயகனாக நடித்தார்.
தற்போது VJ ஆனந்தக் கண்ணன் திடீரென கேன்சர் நோயால் மரணம் அடைந்துள்ளார் என்கிற செய்தி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது குறித்து, இயக்குநர் வெங்கட் பிரபு அவரது ட்விட்டர் பக்கத்தில், “நல்ல நண்பனை இழந்துட்டேன்..” என அறிவித்துள்ளார்.
இதனால், இவரை விரும்பிய 90s Kids பலரையும் மீள முடியாத சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
1
3