ஆன்லைனில் கல்வி பயிலும் அங்கன்வாடி குழந்தைகள் : ஆர்வமாக கற்று வருவதாக அதிகாரி பெருமிதம்!!

14 October 2020, 3:45 pm
Anganwadi children
Quick Share

கோவை : கோவையில் உள்ள 1,697 அங்கன்வாடி மையங்களிலும் வாட்ஸ்-அப் மூலம் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருதாக மாவட்ட அலுவலர் மீனாட்சி தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களுக்கு குழந்தைகள் வருவதற்கு அனுமதி வழங்கப்படாமல் உள்ளது. இந்த சூழலில், அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு வாட்ஸ்-அப் மூலம் கல்வி கற்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரையில் இங்கு 1,697 அங்கன்வாடி மையங்களில் மொத்தம் 1.5 லட்சம் குழந்தைகள் பயின்று வரும் சூழலில், இம்மாதமும் தொடர்ந்து வாட்ஸ்-அப் மூலமாகவே கற்பித்தல் பணி தொடர்வதாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட, மாவட்ட அலுவர் மீனாட்சி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘ அங்கன்வாடி மையங்கள் மூலம் வாட்ஸ் ஆப் குழு ஆரம்பிக்கப்பட்டு அதன் மூலம் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இம்மாதமும் வாட்ஸ் ஆப் மூலம் குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குழந்தைகளும் ஆர்வமுடன் கல்வி கற்று வருகின்றனர்,’’ என்றார்.

Views: - 47

0

0